சித்தர்கள் இராச்சியம்
தமிழ் இலக்கணம் எத்தனை சுத்தமான வரையறைகளைக் கொண்டிருக்கிறதோ, அதைப் போலவே
தமிழ் இலக்கிய வடிவங்களுக்கும் தீர்மானமான வரையறைகள் உண்டு. ஒரு நூலில்
தன்மை அதன் கட்டமைப்பு, அதன் உட்பொருள் ஆகியவைகளைக் கொண்டு அவற்றை
வகைப்படுத்தி இருக்கின்றனர். இவை முறையே காப்பியம், காவியம், வெண்பா
வகைகள், சதகம், நிகண்டு, சூத்திரம், சூடாமணி, சிந்தாமணி, கோவை என
வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.
சித்தர் பெருமக்கள் அருளிய நூல்கள்
பலவும் தொடர்நிலை செய்யுள் வடிவிலானவை. இவை இலக்கணச் சுத்தமாய்
இல்லாவிட்டாலும் கூட, இலக்கிய வரையறைகளில் அடங்கியிருப்பது குறிப்பிடத்
தக்கது. இந்த வகையில் சூத்திரம் எனப்படும் இலக்கிய வகையில் அமைந்த
சித்தர்களின் நூல்களைப் பற்றிய அறிமுகத்தினை இந்த பதிவில் பார்ப்போம்.
சூழ்ந்து வருதல் அல்லது சூழ்த்து வருதலை சூழ்த்திரம் என்பர். இதன் மருவிய
வடிவமே சூத்திரம். இதனை எளிமையாகச் புரிந்து கொள்வதென்றால், தற்காலத்தில்
மென்பொருட்களை உருவாக்கிட உதவும் நிரலைப் போன்றதுதான் சூத்திரம். வெளிப்
பார்வைக்கு ஒன்றாக தோன்றினாலும் அதன் உள்ளர்த்தங்களும், கட்டமைப்புகளும்
நுட்பமும், ஒட்பமும் மிகுந்தவையாக இருக்கும். இதன் பயன்பாடுகளும்
எல்லைகளும் வெவ்வேறு தளத்திலானவை.
சூத்திர நூல்கள் பெரும்பாலும் நான்கு அம்சங்களை முன் நிறுத்துவனவாகவே
அமைந்திருக்கின்றன. அவை முறையே மெய்ஞானம், யோகம், மருத்துவம், இரசவாதம்
எனப்படும் இராசயனம் பற்றியவைகளாவே இருக்கின்றன. இவற்றில் பதஞ்சலி முனிவர்
மட்டுமே யோகம் பற்றிய யோக சூத்திரம் நூலை அருளியிருக்கிறார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
இந்த சூத்திர நூல்களில் இன்னொரு கவனிக்கத் தக்க அம்சம், இவை யாவும் மிகவும்
குறைவான பாடல்களைக் கொண்டவை. அரிதாய் சில சூத்திர நூல்கள் மட்டுமே
நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு கொங்கணவர் கற்ப சூத்திரம் 101 பாடல்களையும், கொங்கணவர் வாத கற்ப சூத்திரம் 121 பாடல்களையும் கொண்டிருக்கின்றன. போகர் அருளிய போகர் ஞான சூத்திரம் 1 - என்ற நூல் ஒரே ஒரு பாடலை கொண்ட சூத்திர நூல் என்பது பலரும் அறியாத செய்தி.
அடிப்படையில் இந்த சூத்திர நூல்கள் மிகவும் நுட்பமான கட்டமைப்புக் கொண்டவை.
அவற்றின் பொருளறிந்து, அவற்றை பயன்படுத்துவது என்பது நிதர்சனத்தில்
மிகவும் சிக்கலான ஒன்று. பல சூத்திர நூல்களின் பொருள் என்னவென்றே இதுவரை
யாரும் அறிந்திடவில்லை. அப்படி அறிந்தவர்கள் அவற்றை வெளியில்
சொல்வதுமில்லை.
சூத்திரம் பற்றி இங்கே எழுதக் காரணம், சித்தர் பெருமக்கள் எல்லோருமே
சூத்திர நூல்களை அருளியிருக்கின்றனர். இவற்றின் எண்ணிக்கை நூற்றுக்
கணக்கிலானது. இந்த சூத்திர நூல்களை யாரும் முறையாக தொகுத்திருக்கின்றனரா
எனத் தெரியவில்லை. எதிர்காலத்தில் குருவருள் அனுமதித்தால், இந்த சூத்திர
நூல்களை எல்லாம் ஒரே நூற் தொகுப்பாய் தொகுத்திடும் ஆசையிருக்கிறது.
இந்த முயற்சியின் துவக்க புள்ளியாகவே இந்த பதிவு அமைகிறது. வரும் நாட்களில்
சூத்திர நூல்களைப் பற்றிய மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
குறிப்பு : இணையமெங்கும் குருபெயர்ச்சி பலன்களைப் பற்றி பலரும்
விரிவாய் எழுதியிருப்பதாலும், தற்போதைய எனது உடல்நிலையில் அப்படியொரு பதிவு
எழுதுவதில் இருந்த சிரமம் காரணமாகவும் குருபெயர்ச்சி பலன்கள் பற்றிய
பதிவினை தவிர்த்திருக்கிறேன். புரிதலுக்கு நன்றி.
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி குருபகவான், நிகழும் மன்மத வருடம் ஆனி மாதம்
20ம் திகதி (05.07.2015) ஞாயிற்றுக் கிழமை இரவு 11.41 மணிக்கு கடக
ராசியிலிருந்து விலகி சிம்ம ராசியில் பிரவேசித்திருக்கிறார். இதனால் அவர்
நிற்கும் புதிய நிலை மற்றும் அங்கிருந்து அவர் பார்வை படும் மற்ற
ராசிகளுக்கான பலன்களைப் பற்றியும் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த பதிவில் குருபகவான் யார், அவருடைய இயல்புகள் எத்தகையவை, அவருக்கான
அடையாளங்கள், கூறுகள் பற்றிய விவரங்களை தொகுத்திருக்கிறேன். இந்த தகவல்கள்
ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு என்னுடைய இன்னொரு வலைப்பதிவில் பகிர்ந்த
தகவல்.
சோதிடவியலில் ஐந்தாவது கோளான வியாழனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டனப்பான், குரு, சிகண்டிசன், சீவன்,
சுருகுறா, தாரபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகற்பதி, வீதகன், பொன்,
மறையோன், வேதன், வேந்தன் ஆகியனவாகும்.
உரிய பால் : ஆண் கிரகம்.
உரிய நிறம் : மஞ்சள் நிறம் (பொன்னிறம்).
உரிய இனம் : பிராமண இனம்.
உரிய வடிவம் : உயரம்.
உரிய அவயம் : இருதயம்.
உரிய உலோகம் : பொன்.
உரிய மொழி : தெலுங்கு, கன்னடம், மலையாளம்.
உரிய ரத்தினம் : புஷ்பராகம்.
உரிய ஆடை : பொன்னிற ஆடை.
உரிய மலர் : முல்லை.
உரிய தூபம் : ஆம்பல்.
உரிய வாகனம் : யானை.
உரிய சமித்து : அரசு.
உரிய சுவை : தித்திப்பு.
உரிய தான்யம் : கொத்துக்கடலை.
உரிய பஞ்ச பூதம் : தேயு.
உரிய நாடி : வாத நாடி.
உரிய திக்கு : வடகிழக்கு( ஈசான்யம் ).
உரிய அதி தேவதை : பிரம்மா, தட்சிணாமூர்த்தி.
உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.
உரிய குணம் : சாந்தம்.
உரிய ஆசன வடிவம் : செவ்வகம்.
உரிய தேசம் : சிந்து.
நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
பகைப் பெற்ற கோள்கள் : புதன், சுக்கிரன்.
சமனான நிலை கொண்ட கோள்கள் : சனி, ராகு, கேது.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒருவருடம்.
உரிய தெசா புத்திக் காலம் : பதினாறு ஆண்டுகள்.
வியாழனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 3,6,8,12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு : சிம்மம், கன்னி, ரிஷபம், மிதுனம், துலாம், கும்பம்.
பகை வீடு : மேஷம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் : தனுசு, மீனம்.
நீசம் பெற்ற இடம் : மகரம்.
உச்சம் பெற்ற இடம் : கடகம்.
மூலதிரி கோணம் : தனுசு.
உரிய உப கிரகம் : எமகண்டன்.
உரிய காரகத்துவம் : புத்திர காரகன்.
புத்திரர், பிரம்மா, ஞானம், யோகாப்பியாசம், அச்சாரியத்துவம், அட்டமா
சித்திகள், அரச சேவை, இராச சன்மானம், சொர்ணம், தேன், கடலை, புத்தியுக்தி,
இவைகளுக்கு எல்லாம் வியாழன் தான் காரகன்.
தியான சுலோகம் (தமிழ்)..
"குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ருகஸ்பதி வியாழப் பாகுரு நேசா
க்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி"
தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..
"தேவாநாஞ்ச ரிஷீணாஞ்ச
குரும் காஞ்சன ஸநிபம்|
பக்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்||"
வியாழன் காயத்ரி..
"ஓம் வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்||"
அடுத்த பதிவில் இந்த குருபெயர்ச்சியினால் 12 ராசிகளுக்குமான பலன்களைப் பற்றி சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.
Hi
ReplyDelete