5 July 2016

அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ?



அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்த வருட அட்சய திரிதியை இன்றும், நாளையும் உள்ளது.
இந்த அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உதந்த நேரம் குறித்து வலைத்தமிழ் ஜோதிட வாசகர் ஒருவர் கணித்து அனுப்பியுள்ள தகவல்கள் பின்வருமாறு,
அட்சய திரிதியை உள்ள நேரம் : இன்று பகல் 12.13 முதல் நாளை பகல் 12.57 மணி வரை அட்சய திரிதியை உள்ளது.
தங்கம் வாங்க நல்ல நேரம் :
மே 1 : பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை
மே 2 : காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
தங்கம் வாங்க முடியாதவர்கள், குறிப்பிடப்பட்டுள்ள நல்ல நேரத்தில் மஞ்சள், உப்பு வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.

பிராயச்சித்தம் சொல்லட்டுமா!

* சிவனடியில் முழுமையாகச் சரணடைந்து விட்டால் அமைதியும், ஆன்மிக உணர்வும் கிடைக்கும். அந்நிலையில் நம் குறைகளைப் பற்றி முறையிடும் எண்ணம் தோன்றாது. முழுமையான பக்தியின் இயல்பு இது தான்.
* புதிய ஆசைகளை வளர்க்காதீர்கள், புதிய விஷயங்ககளைத் தேடி அலையாதீர்கள், நீங்கள் செய்த தவறுகளிலிருந்து மீளுவதற்கு உரிய பிராயச்சித்தம் இதுவே. ஆனால், மனிதர்களோ இதற்கு நேர்எதிர்மாறாக அலைந்து துன்பத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். 
* கடவுளிடமோ, குருவிடமோ சரணடைந்துவிட்டால், அவரது அருளே ஒருவரைச் சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அதன்பின், ஒருவர் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. 
* இறைவன் காப்பாற்றுவான் என்ற எண்ணத்தில் உறுதி இருந்தால் மனம் தெளிவடையும். அப்போது தவறு செய்ய இடம் உண்டாகாது. 
* "கடவுளிடம் சரணடைந்து விட்டேன்' என வெறும் வார்த்தையை மட்டும் உதிர்த்து பயனில்லை. உளப்பூர்வமாக அவரிடம் சரணடைய வேண்டும்.



 உங்கள் கருத்துகள் பதிவு செய்ய

முக்கிய குறிப்பு:
வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

4 July 2016

திருநீறு அணிவது ஏன்? திருநீறு வைத்துக் கொள்ளும் இடங்களும், அதன் பலன்களும் !!


அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.
எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.
இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.
இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.
சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!
நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.
இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.


விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
- தர்மத்தின் பாதையில்

ஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா?

ஆலயத்தினுள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும். பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும்.
பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும். உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும். ஏனென்றால், அந்த படியை தாண்டும் போது, ”நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன். இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நேர்மறை ( நல்ல ) வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா ” என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும்.  அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம்
ஒரு ஆலயம் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும், நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும், முழுதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும். எனவேதான் கோயிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை பெற்று உயர்வுடனும், மன நிம்மதியுடனும்  வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம் …

மாயன் காலண்டரை மறப்போம். இந்தியன் காலண்டரை மதிப்போம்!

மாயன் காலண்டரை மறப்போம். இந்தியன் காலண்டரை மதிப்போம்! 
ஜோதிடர் பலராமன் 
இந்த உலகமே இப்போது மாயன் காலண்டரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. நாம் வாழும் இவ்வுலகில் மிகச் சிறந்த காலண்டர் இந்திய காலண்டர் தான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். உலகின் வேறு எந்த நாட்டுக் காலண்டரிலும் அன்றைய தேதியும் கிழமையும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். நம் நாட்டுக் காலண்டர் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. பஞ்சாங்கம் என்றால் என்ன? பஞ்ச அங்கம் அதாவது ஐந்து அங்கங்கள் கொண்டது என்று பொருளாகும். அவை என்ன? 
முதலாவது அங்கம் - தேதி என்பது திதி என்பதன் மருவி வந்த சொல்  தான். இது எதைச் சொல்கிறது?ஒரு மாதத்தில் முப்பது திதிகள் உள்ளன. வளர்பிறை 15 + தேய்பிறை 15. திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரமாகும். உதாரணமாக பிரதமை என்றால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 1/ 15 மடங்கு தூரம் அல்லது முதல் தேதி என்று பொருள். பஞ்சமி என்றால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 5 / 15 மடங்கு தூரம் அல்லது ஐந்தாம் தேதி என்று பொருள். இவற்றில் நன்மை மற்றும் தீமை தரும் திதிகள் உள்ளன. எந்த திதியில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம் என்று விதிகள் உண்டு.
இரண்டாவது அங்கம் -  கிழமை. மொத்தம் உள்ள 9 கிரகங்களில் ராகு கேதுவைத் தவிர மற்ற 7 கிரகங்களுக்கும் கிழமைகள் உள்ளன. (ராகு கேது கிரகங்கள் உருவம் அற்றவை. பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டவை). சூரியன் முதல் சனி வரை ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு கிழமை உண்டு. இவற்றில் நன்மை மற்றும் தீமை தரும் கிழமைகள் உள்ளன. எந்த கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம் என்று விதிகள் உண்டு.
மூன்றாவது அங்கம் நட்சத்திரம். வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை 27 - பகுதிகளாகப் பிரித்து பார்ப்பது நட்சத்திரம் ஆகும். இதில் சந்திரன்  தான் சென்று  கொண்டிருக்கும்  பாதையில் அன்றைய தினம் எந்த நட்சத்திரத்தைக் கடந்து கொண்டிருக்கிறதோ அதுவே அன்றைய தின நட்சத்திரமாகும். 360 பாகைகள் கொண்ட வான மண்டலத்தில் ஒரு நட்சத்திரத்திற்கு 13 பாகைகள் 20 கலைகள் ஆகும். எந்த நட்சத்திரங்களில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம் என்று விதிகள் உண்டு.
நான்காவது அங்கம் யோகம். அமிர்த யோகம், சித்த யோகம் மற்றும் மரண யோகம் ஆகியவை. இது வான மண்டலத்தில் சென்று கொண்டிருக்கும் சூரியன் செல்லும் தூரத்தையும் சந்திரன் செல்லும் தூரத்தையும் சேர்த்துப் பார்ப்பதே ஆகும். இதில் அமிர்த யோகமும் சித்த யோகமும் நன்மை தரும் யோகங்கள். மரண யோகம் தீமை தருவது ஆகும்.
ஐந்தாவது அங்கம் கரணம். இது திதியில் சரி பாதியாகும். மொத்தம் 11 கரணங்கள் உள்ளன. இவற்றிலும் நன்மை மற்றும் தீமை தரும் கரணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் இப்போது கடைபிடிக்கப்படுவதில்லை. ஆனால் கடைபிடிப்பது நல்லது. 
நாம் செய்யும் முக்கியமான நல்ல காரியங்களை நாள் நட்சத்திரம் பார்த்து செய்யவேண்டும். அப்போது தான் அவை நிலைத்து நிற்கும். உதாரணமாக திருமண மண்டபத்தை பதிவு செய்த பிறகு திருமண நாளை முடிவு செய்யக்கூடாது. மணமகனுக்கும்  மணமகளுக்கும் பொருத்தமான நாளை முடிவு செய்த பிறகே திருமண மண்டபத்தை பதிவு செய்ய வேண்டும். 
மாயன் காலண்டரை மறப்போம். இந்தியன் காலண்டரை மதிப்போம்! 
மாயன் காலண்டரை மறப்போம். இந்தியன் காலண்டரை மதிப்போம்!
ஜோதிடர் பலராமன்
இந்த உலகமே இப்போது மாயன் காலண்டரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. நாம் வாழும் இவ்வுலகில் மிகச் சிறந்த காலண்டர் இந்திய காலண்டர் தான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். உலகின் வேறு எந்த நாட்டுக் காலண்டரிலும் அன்றைய தேதியும் கிழமையும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். நம் நாட்டுக் காலண்டர் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. பஞ்சாங்கம் என்றால் என்ன? பஞ்ச அங்கம் அதாவது ஐந்து அங்கங்கள் கொண்டது என்று பொருளாகும். அவை என்ன?
முதலாவது அங்கம் - தேதி என்பது திதி என்பதன் மருவி வந்த சொல்  தான். இது எதைச் சொல்கிறது?ஒரு மாதத்தில் முப்பது திதிகள் உள்ளன. வளர்பிறை 15 + தேய்பிறை 15. திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரமாகும். உதாரணமாக பிரதமை என்றால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 1/ 15 மடங்கு தூரம் அல்லது முதல் தேதி என்று பொருள். பஞ்சமி என்றால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 5 / 15 மடங்கு தூரம் அல்லது ஐந்தாம் தேதி என்று பொருள். இவற்றில் நன்மை மற்றும் தீமை தரும் திதிகள் உள்ளன. எந்த திதியில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம் என்று விதிகள் உண்டு.
இரண்டாவது அங்கம் -  கிழமை. மொத்தம் உள்ள 9 கிரகங்களில் ராகு கேதுவைத் தவிர மற்ற 7 கிரகங்களுக்கும் கிழமைகள் உள்ளன. (ராகு கேது கிரகங்கள் உருவம் அற்றவை. பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டவை). சூரியன் முதல் சனி வரை ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு கிழமை உண்டு. இவற்றில் நன்மை மற்றும் தீமை தரும் கிழமைகள் உள்ளன. எந்த கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம் என்று விதிகள் உண்டு.
மூன்றாவது அங்கம் நட்சத்திரம். வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை 27 - பகுதிகளாகப் பிரித்து பார்ப்பது நட்சத்திரம் ஆகும். இதில் சந்திரன்  தான் சென்று  கொண்டிருக்கும்  பாதையில் அன்றைய தினம் எந்த நட்சத்திரத்தைக் கடந்து கொண்டிருக்கிறதோ அதுவே அன்றைய தின நட்சத்திரமாகும். 360 பாகைகள் கொண்ட வான மண்டலத்தில் ஒரு நட்சத்திரத்திற்கு 13 பாகைகள் 20 கலைகள் ஆகும். எந்த நட்சத்திரங்களில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம் என்று விதிகள் உண்டு.
நான்காவது அங்கம் யோகம். அமிர்த யோகம், சித்த யோகம் மற்றும் மரண யோகம் ஆகியவை. இது வான மண்டலத்தில் சென்று கொண்டிருக்கும் சூரியன் செல்லும் தூரத்தையும் சந்திரன் செல்லும் தூரத்தையும் சேர்த்துப் பார்ப்பதே ஆகும். இதில் அமிர்த யோகமும் சித்த யோகமும் நன்மை தரும் யோகங்கள். மரண யோகம் தீமை தருவது ஆகும்.
ஐந்தாவது அங்கம் கரணம். இது திதியில் சரி பாதியாகும். மொத்தம் 11 கரணங்கள் உள்ளன. இவற்றிலும் நன்மை மற்றும் தீமை தரும் கரணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் இப்போது கடைபிடிக்கப்படுவதில்லை. ஆனால் கடைபிடிப்பது நல்லது.
நாம் செய்யும் முக்கியமான நல்ல காரியங்களை நாள் நட்சத்திரம் பார்த்து செய்யவேண்டும். அப்போது தான் அவை நிலைத்து நிற்கும். உதாரணமாக திருமண மண்டபத்தை பதிவு செய்த பிறகு திருமண நாளை முடிவு செய்யக்கூடாது. மணமகனுக்கும்  மணமகளுக்கும் பொருத்தமான நாளை முடிவு செய்த பிறகே திருமண மண்டபத்தை பதிவு செய்ய வேண்டும்.
மாயன் காலண்டரை மறப்போம். இந்தியன் காலண்டரை மதிப்போம்!

பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா?

 
ஆம்.
கோள்களின் இயக்கங்கள் என்ன உணர்த்துகின்றன என்பது தான் ஜோதிடம்.  கோள்கள் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு கோளும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு எடுத்துக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக சந்திரன் இரண்டரை நாள், சனி இரண்டரை வருடம். இந்த இடமாற்ற விளைவுதான் விதிக்கப்பட்ட விதியின் விளையாட்டு.
 ஜெனன ஜாதகத்தை வைத்து வர்க்கச் சக்கரங்களின் உதவியுடனும் திசாபுத்தி அந்தரங்களின் மூலம் கணிக்கப்பட்டு கூறப்படுவது தான் ஜாதகப் பலன்கள். அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நம்பகமானது. இது நம்முடைய தனிப்பட்ட ஜாதக பலன்கள் ஆகும்.
 இன்று பத்திரிக்கைகளிலும், வார மாத நாளிதழ்களில் வரும் ராசிபலன்கள் என்பது சந்திரனை மையப்படுத்தி கூறப்படும் ராசி பலன். சந்திரன் மனோகாரகன். மனம் அது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்கத் தேவையில்லை. அந்த மனத்திற்கு காரகர் சந்திரன். நம்முடைய எண்ணங்களின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பது தான் பொதுவான ராசி பலன். மேலும் அன்றைய நடப்பு நட்சத்திரங்களின் பங்கு மிக முக்கியம். நட்சத்திரங்கள் இருக்கும் இடம் தான் சந்திரன் இருக்கும் இடம் அதனால் நட்சத்திரமும் சந்திரனும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
 இவற்றை வைத்துத் தான் பொதுப் பலன்கள் எழுதப் படுகின்றன. ஒரே ராசியில் கோடி பேர்கள் இருக்கிறார்கள். ஒரு வார்த்தையில் உள்ள பலன் அணைவருக்கும் ஒன்றாக அமையுமா? என்றால் அமையும். இராசிபலன்கள் ஒரு கிரகத்தைமட்டும் வைத்து கூறப்படுவதில்லை. ஒன்பது கோள்களின் நிலையையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் பலன்கள் கூறப்படுகின்றன. தினப்பலன்கள் கூட அன்றைய தினத்தில் அந்த ராசியில் பிறந்தோரின் மனோநிலையை அது பிரதிபலிக்கும்.  மனோநிலை என்பது என்ன? கோபம், ஏக்கம், மகிழ்ச்சி, துக்கம் இது போன்ற உணர்ச்சிகள் தான். இது அன்றைய தினத்தின் வெளிப்பாடாக இருக்கும். இது ஏறக்குறைய உண்மையாக இருப்பதால் தான் இன்று அனைத்து தொடர்பு சாதனங்களிலும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.
 குருபெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள் போன்ற பெயர்ச்சி பலன்கள் அந்தந்த ராசிக்குரிய கோச்சார நிலையை மையமாக வைத்து பலன்கள் கூறப்படுகின்றன. அட்டமத்து சனி நல்லது செய்யாது என்று இராசியை வைத்து மட்டும் கூறுவது சிறப்பல்ல. ஜெனன ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்து திசை புத்தி அந்தரம் நடத்தும் போது அட்டமத்து சனி விபரீத இராஜயோகத்தைக் கொடுக்கலாம்.
சாதகருடைய பலன்கள் முழுவதுமாக இதில் அடங்குவதில்லை. கோச்சாரப் பலன்கள் முழுவதும் ஜெனன கால ஜாதகத்தை வைத்தே பார்க்கப்பட வேண்டும். அப்பொழுது தான் அது சரியான தீர்வைத் தரும். அப்படியிருக்க இதற்கு ஏன் இந்த முக்கியத்துவம்?
 இது ஒரு முதலுதவி அதனால் தான் இந்த முக்கியத்துவம்.

பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள்

 
பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள்
ஜோதிடர் பலராமன்
நாம் வாழும் இவ்வுலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. இவை இல்லாமல் எந்த உயிரினமும் இவ்வுலகில் வாழ முடியாது. வேறு வகையில் சொன்னால் நம்மைப் படைத்த இறைவனே பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயமாக விளங்குகின்றான். ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு.
நிலம்: நாம் வாழும் பூமியாகிய இந்த நிலம் பொறுமைக்கு உதாரணமானது. கடப்பாரையால் குத்தித் தோண்டினாலும், இயந்திரங்களால் துளையிட்டாலும் எந்த சலனமும் இல்லாமல் அமைதியே வடிவாக விளங்குகிறது. அறியாமையினால் நாம் மண்ணை உயிரற்றது என்கிறோம். உயிரற்ற மண்ணிலிருந்து உயிருள்ள தாவரங்கள் தோன்றாது. பொறுமையின் இலக்கணமான இந்த பூமி மனிதனால் எவ்வளவு துன்புறுத்தித் தோண்டப் பட்டாலும் நமக்குத் தேவையான தண்ணீர், பலவகையான உலோகங்கள், கனிமங்களைத் தருகின்றது. நாம் உண்ணும் உணவை விளையச் செய்கிறது.

"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்

நாண நன்னயம் செய்துவிடல்"       
என்ற திருக்குறளுக்கு இலக்கணம் இந்த பூமியாகும்.  
நீர்: எந்த சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல் இயல்பாகவே தானாகவே தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையது. தண்ணீர் குளிர்ந்தால் பனிக்கட்டியாக மாறும். சூடானால் நீராவியாகும். ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் அதன் வடிவத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொள்ளும். இதைத்தான் நெளிவு சுளிவு தெரிந்து நடந்து கொள்ளுதல் என்று பெரியோர்கள் சொல்வார்கள். ஒருவர் அதிக துன்பப் படும்போதோ அல்லது ஆனந்தப் படும்போதோ கண்ணீர் வருகிறது. இது உணர்ச்சியின் அல்லது பாசத்தின் வெளிப்பாடு. தண்ணீர் கீழ் நோக்கிச் செல்லும் இயல்பு கொண்டது.  இது பணிவின் வெளிப்பாடு. ஆகவே தண்ணீர் பாசத்துக்கும் பணிவுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று சொல்லலாம்.
"நீரின்றி அமையாது உலகு எனின் யார்யார்க்கும்
வான் நின்று அமையாது ஒழுக்கு"      
நீர் மற்றும் வானத்தின் பெருமைகளை ஒரே குறளில் வள்ளுவர் சிறப்பிக்கின்றார். 
நெருப்பு: மேற்கண்ட இரண்டு பூதங்களிலிருந்து வேறுபட்டது. இந்த உலகில் உள்ள எந்தப் பொருளையும் எரித்து சாம்பலாக்கும் அல்லது தன்னுடையதாக ஆக்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் மேல் நோக்கியே செல்லும் தன்மை கொண்டது. மனிதர்களுடைய பிரார்த்தனைகளை கோரிக்கைகளை இறைவனிடம் எடுத்துச் செல்லும் சிறப்புத் தன்மை கொண்டது. இதனால் தான் இந்துமத வழக்கப்படி அக்னி சாட்சியாக திருமணம் செய்யப்படுகிறது. அந்தணர் சொல்லும் மந்திரங்களில் "அக்னி தேவனை வேண்டி இந்தத் திருமணச் செய்தியை இறைவனுடன் கொண்டுபோய் சேர்க்கச் சொல்லுகிறார். பிறகு இறைவனுடைய அருளைப் பெற்று வரச் சொல்லுகிறார். எனவே "நெருப்பு ஒரு தேவ தூதன்" என்று சொன்னால் மிகையாகாது. எளிமையாகச் சொல்வதாக இருந்தால் பிரார்த்தனையின்போது நெருப்பு ஒரு தபால் காரரின் வேலையைச் செய்கிறது. இதனால்தான் ஜாதகத்தில் குறையிருந்தால் கோயிலில் ஒரு குறிப்பிட்ட குறைபாட்டை நீக்க அது சம்பந்தப்பட்ட கிரகத்துக்கோ அல்லது தெய்வத்துக்கோ விளக்கு ஏற்றச் சொல்கிறார்கள். இதையே பெரிய அளவில் செய்வதாக இருந்தால் ஹோமம் என்று சொல்கிறோம். கிரகப் பிரவேசத்தின்போது கணபதி ஹோமம் செய்வது விநாயகரை வணங்கி அவருக்குத் தகவல் கொடுத்துவிட்டு நல்லபடியாக வாழத் தொடங்குகிறோம்.
காற்று: தான் இல்லையென்றால் இந்தஉலகில் யாராலும் வாழ முடியாது என்று தெரிந்திருந்தாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இந்த உலகில் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. காற்று தன்னடக்கத்துக்கு உதாரணம். எல்லோரையும் இலவசமாகவே வாழவைக்கிறது. காற்றில் மனிதர்களுக்கு தேவையான ஆக்சிஜனும், தாவரங்களுக்குத் தேவையான கார்பன் டை ஆக்சைடும் கலந்தே இருக்கும் சிறப்பு உயிரினங்களுக்கு காற்று வாழ்வதற்குத் தரும் ஒரு சிறந்த வாய்ப்பு அல்லது வரம்.
ஆகாயம்: நாம் வாங்கும் தெய்வங்கள் வாழும் இடம் என்று நாம் நம்பும் ஒரு ஆகாய வெளி. இந்த உலகைப் படைத்து இயக்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைவிட பல சிறந்த தன்மைகளும் சக்திகளும் இருப்பதாலேயே உயர்ந்த தன்மை வாய்ந்த தெய்வங்கள் என்று நம்புகிறோம். அதனாலேய கடவுள்கள் மேல் உலகத்தில் இருக்கிறார்கள். ஒரு சாதாரண கிரைண்டர் சுற்றுவதற்கே மின்சக்தி தேவைப்படுகிறது; சுழல ஒரு அச்சு தேவைப்படுகிறது. அப்படி என்றால் அறுநூறு கோடி மக்களைக் கொண்ட இந்த பூமி இருபத்தி நான்கு மணி நேரத்தில் ஒரு சுற்று சற்ற எவ்வளவு சக்தி தேவைப்படும்? இதற்கு அச்சு எங்கே? அதுவும் பூமி இருபது மூன்றரை டிகிரி சாய்ந்து கொண்டே சுற்றுகிறது. இது எப்படி சாத்தியம்? அந்தரத்தில் சுழலும் பூமியை ஆகாயத்தில் இருக்கும் சக்திகளே - தெய்வங்களே இயக்குகின்றன என்பதை அறிவுள்ள மனிதர்களால் புரிந்து கொள்ள முடியும்.
"வான் நோக்கி வாழும் உலகெலாம் மன்னவன் 
கோல்நோக்கி வாழும்குடி" -   
 ஆகாயத்தின் பெருமையை வள்ளுவர் விளக்கும் சிறப்பு.  

இதைத்தான்

"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி  
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்  
கோனாகி யான் எனது என்று அவர் அவரை கூத்தாட்டு 
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே"  
என்று மாணிக்க வாசகர் சிவபெருமானை நினைத்துப் பாடினார். எனவே இறைவனே இந்த பஞ்ச பூதங்களைப் படைத்தது பஞ்ச பூதங்களாக விளங்கி நமை வாழ வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் உணரவேண்டும். அது மட்டுமின்றி பஞ்ச பூதங்களின் தன்மையால் மனிதன் எவ்வாறு விட்டுக் கொடுத்துப் பழகவேண்டும்; மற்றவர்களுக்கு உதவும் வகையில் வாழவேண்டும் என்றும் உணர்த்துகிறார்.
நிலத்துக்கு உரிய திருத்தலம் காஞ்சிபுரம் - இறைவன் ஏகாம்பரநாதர்.
நீருக்கு உரிய திருத்தலம் திருவானைக்கா - இறைவன் ஜம்புலிங்கேஸ்வரர்.  
நெருப்புக்கு உரிய திருத்தலம் - திருவண்ணாமலை - இறைவன் அருணாச்சலீஸ்வரர். காற்றுக்கு உரிய திருத்தலம் ஸ்ரீகாள ஹஸ்தி - இறைவன் ஸ்ரீகாள ஹஸ்தீஸ்வரர். ஆகாயத்துக்கு உரிய திருத்தலம் - சிதம்பரம் இறைவன் நடராஜர்.  

இத்திருத்தலங்களில்  சிவபெருமானை வணங்குங்கள். என்றும் இன்புற்று வாழ்த்திடுங்கள்!