மாயன் காலண்டரை மறப்போம். இந்தியன் காலண்டரை மதிப்போம்!
ஜோதிடர் பலராமன்
இந்த உலகமே இப்போது மாயன் காலண்டரைப் பற்றி
பேசிக்கொண்டிருக்கிறது. நாம் வாழும் இவ்வுலகில் மிகச் சிறந்த காலண்டர்
இந்திய காலண்டர் தான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். உலகின் வேறு எந்த
நாட்டுக் காலண்டரிலும் அன்றைய தேதியும் கிழமையும் மட்டுமே
குறிப்பிடப்பட்டிருக்கும். நம் நாட்டுக் காலண்டர் பஞ்சாங்கத்தின்
அடிப்படையில் அமைந்துள்ளது. பஞ்சாங்கம் என்றால் என்ன? பஞ்ச அங்கம் அதாவது
ஐந்து அங்கங்கள் கொண்டது என்று பொருளாகும். அவை என்ன?
முதலாவது அங்கம் - தேதி என்பது திதி என்பதன் மருவி வந்த
சொல் தான். இது எதைச் சொல்கிறது?ஒரு மாதத்தில் முப்பது திதிகள் உள்ளன.
வளர்பிறை 15 + தேய்பிறை 15. திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும்
இடைப்பட்ட தூரமாகும். உதாரணமாக பிரதமை என்றால் சூரியனுக்கும்
சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 1/ 15 மடங்கு தூரம் அல்லது முதல் தேதி
என்று பொருள். பஞ்சமி என்றால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட
தூரம் 5 / 15 மடங்கு தூரம் அல்லது ஐந்தாம் தேதி என்று பொருள். இவற்றில்
நன்மை மற்றும் தீமை தரும் திதிகள் உள்ளன. எந்த திதியில் என்னென்ன
காரியங்களைச் செய்யலாம் என்று விதிகள் உண்டு.
இரண்டாவது அங்கம் - கிழமை. மொத்தம் உள்ள 9 கிரகங்களில்
ராகு கேதுவைத் தவிர மற்ற 7 கிரகங்களுக்கும் கிழமைகள் உள்ளன. (ராகு கேது
கிரகங்கள் உருவம் அற்றவை. பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டவை). சூரியன் முதல்
சனி வரை ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு கிழமை உண்டு. இவற்றில் நன்மை மற்றும்
தீமை தரும் கிழமைகள் உள்ளன. எந்த கிழமைகளில் என்னென்ன காரியங்களைச்
செய்யலாம் என்று விதிகள் உண்டு.
மூன்றாவது அங்கம் நட்சத்திரம். வான மண்டலத்தில் உள்ள
நட்சத்திரக் கூட்டங்களை 27 - பகுதிகளாகப் பிரித்து பார்ப்பது நட்சத்திரம்
ஆகும். இதில் சந்திரன் தான் சென்று கொண்டிருக்கும் பாதையில் அன்றைய
தினம் எந்த நட்சத்திரத்தைக் கடந்து கொண்டிருக்கிறதோ அதுவே அன்றைய தின
நட்சத்திரமாகும். 360 பாகைகள் கொண்ட வான மண்டலத்தில் ஒரு நட்சத்திரத்திற்கு
13 பாகைகள் 20 கலைகள் ஆகும். எந்த நட்சத்திரங்களில் என்னென்ன காரியங்களைச்
செய்யலாம் என்று விதிகள் உண்டு.
நான்காவது அங்கம் யோகம். அமிர்த யோகம், சித்த யோகம்
மற்றும் மரண யோகம் ஆகியவை. இது வான மண்டலத்தில் சென்று கொண்டிருக்கும்
சூரியன் செல்லும் தூரத்தையும் சந்திரன் செல்லும் தூரத்தையும் சேர்த்துப்
பார்ப்பதே ஆகும். இதில் அமிர்த யோகமும் சித்த யோகமும் நன்மை தரும்
யோகங்கள். மரண யோகம் தீமை தருவது ஆகும்.
ஐந்தாவது அங்கம் கரணம். இது திதியில் சரி பாதியாகும்.
மொத்தம் 11 கரணங்கள் உள்ளன. இவற்றிலும் நன்மை மற்றும் தீமை தரும் கரணங்கள்
உள்ளன. இவை பெரும்பாலும் இப்போது கடைபிடிக்கப்படுவதில்லை. ஆனால்
கடைபிடிப்பது நல்லது.
நாம் செய்யும் முக்கியமான நல்ல காரியங்களை நாள்
நட்சத்திரம் பார்த்து செய்யவேண்டும். அப்போது தான் அவை நிலைத்து நிற்கும்.
உதாரணமாக திருமண மண்டபத்தை பதிவு செய்த பிறகு திருமண நாளை முடிவு
செய்யக்கூடாது. மணமகனுக்கும் மணமகளுக்கும் பொருத்தமான நாளை முடிவு செய்த
பிறகே திருமண மண்டபத்தை பதிவு செய்ய வேண்டும்.
மாயன் காலண்டரை மறப்போம். இந்தியன் காலண்டரை மதிப்போம்!
மாயன் காலண்டரை மறப்போம். இந்தியன் காலண்டரை மதிப்போம்!
ஜோதிடர் பலராமன்
இந்த உலகமே இப்போது மாயன் காலண்டரைப்
பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. நாம் வாழும் இவ்வுலகில் மிகச் சிறந்த
காலண்டர் இந்திய காலண்டர் தான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். உலகின்
வேறு எந்த நாட்டுக் காலண்டரிலும் அன்றைய தேதியும் கிழமையும் மட்டுமே
குறிப்பிடப்பட்டிருக்கும். நம் நாட்டுக் காலண்டர் பஞ்சாங்கத்தின்
அடிப்படையில் அமைந்துள்ளது. பஞ்சாங்கம் என்றால் என்ன? பஞ்ச அங்கம் அதாவது ஐந்து அங்கங்கள் கொண்டது என்று பொருளாகும். அவை என்ன?
முதலாவது அங்கம் - தேதி என்பது திதி என்பதன் மருவி வந்த சொல் தான். இது எதைச் சொல்கிறது?ஒரு மாதத்தில் முப்பது திதிகள் உள்ளன. வளர்பிறை 15 + தேய்பிறை 15. திதி
என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரமாகும். உதாரணமாக
பிரதமை என்றால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 1/ 15 மடங்கு தூரம் அல்லது முதல் தேதி என்று பொருள். பஞ்சமி என்றால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 5 / 15
மடங்கு தூரம் அல்லது ஐந்தாம் தேதி என்று பொருள். இவற்றில் நன்மை மற்றும்
தீமை தரும் திதிகள் உள்ளன. எந்த திதியில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம்
என்று விதிகள் உண்டு.
இரண்டாவது அங்கம் - கிழமை. மொத்தம் உள்ள 9 கிரகங்களில் ராகு கேதுவைத் தவிர மற்ற 7
கிரகங்களுக்கும் கிழமைகள் உள்ளன. (ராகு கேது கிரகங்கள் உருவம் அற்றவை.
பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டவை). சூரியன் முதல் சனி வரை ஒவ்வொரு
கிரகத்துக்கும் ஒரு கிழமை உண்டு. இவற்றில் நன்மை மற்றும் தீமை தரும்
கிழமைகள் உள்ளன. எந்த கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம் என்று
விதிகள் உண்டு.
மூன்றாவது அங்கம் நட்சத்திரம். வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை 27 - பகுதிகளாகப்
பிரித்து பார்ப்பது நட்சத்திரம் ஆகும். இதில் சந்திரன் தான் சென்று
கொண்டிருக்கும் பாதையில் அன்றைய தினம் எந்த நட்சத்திரத்தைக் கடந்து
கொண்டிருக்கிறதோ அதுவே அன்றைய தின நட்சத்திரமாகும். 360 பாகைகள் கொண்ட வான மண்டலத்தில் ஒரு நட்சத்திரத்திற்கு 13 பாகைகள் 20 கலைகள் ஆகும். எந்த நட்சத்திரங்களில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம் என்று விதிகள் உண்டு.
நான்காவது அங்கம் யோகம். அமிர்த யோகம், சித்த
யோகம் மற்றும் மரண யோகம் ஆகியவை. இது வான மண்டலத்தில் சென்று
கொண்டிருக்கும் சூரியன் செல்லும் தூரத்தையும் சந்திரன் செல்லும்
தூரத்தையும் சேர்த்துப் பார்ப்பதே ஆகும். இதில் அமிர்த யோகமும் சித்த
யோகமும் நன்மை தரும் யோகங்கள். மரண யோகம் தீமை தருவது ஆகும்.
ஐந்தாவது அங்கம் கரணம். இது திதியில் சரி பாதியாகும். மொத்தம் 11
கரணங்கள் உள்ளன. இவற்றிலும் நன்மை மற்றும் தீமை தரும் கரணங்கள் உள்ளன. இவை
பெரும்பாலும் இப்போது கடைபிடிக்கப்படுவதில்லை. ஆனால் கடைபிடிப்பது நல்லது.
நாம் செய்யும் முக்கியமான நல்ல
காரியங்களை நாள் நட்சத்திரம் பார்த்து செய்யவேண்டும். அப்போது தான் அவை
நிலைத்து நிற்கும். உதாரணமாக திருமண மண்டபத்தை பதிவு செய்த பிறகு திருமண
நாளை முடிவு செய்யக்கூடாது. மணமகனுக்கும் மணமகளுக்கும் பொருத்தமான நாளை
முடிவு செய்த பிறகே திருமண மண்டபத்தை பதிவு செய்ய வேண்டும்.
மாயன் காலண்டரை மறப்போம். இந்தியன் காலண்டரை மதிப்போம்!
No comments:
Post a Comment