வாக்கிய பஞ்சாங்கத்தின் படி குருபகவான், நிகழும் மன்மத வருடம் ஆனி மாதம்
20ம் திகதி (05.07.2015) ஞாயிற்றுக் கிழமை இரவு 11.41 மணிக்கு கடக
ராசியிலிருந்து விலகி சிம்ம ராசியில் பிரவேசித்திருக்கிறார். இதனால் அவர்
நிற்கும் புதிய நிலை மற்றும் அங்கிருந்து அவர் பார்வை படும் மற்ற
ராசிகளுக்கான பலன்களைப் பற்றியும் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த பதிவில் குருபகவான் யார், அவருடைய இயல்புகள் எத்தகையவை, அவருக்கான
அடையாளங்கள், கூறுகள் பற்றிய விவரங்களை தொகுத்திருக்கிறேன். இந்த தகவல்கள்
ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு என்னுடைய இன்னொரு வலைப்பதிவில் பகிர்ந்த
தகவல்.
சோதிடவியலில் ஐந்தாவது கோளான வியாழனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டனப்பான், குரு, சிகண்டிசன், சீவன்,
சுருகுறா, தாரபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகற்பதி, வீதகன், பொன்,
மறையோன், வேதன், வேந்தன் ஆகியனவாகும்.
உரிய பால் : ஆண் கிரகம்.
உரிய நிறம் : மஞ்சள் நிறம் (பொன்னிறம்).
உரிய இனம் : பிராமண இனம்.
உரிய வடிவம் : உயரம்.
உரிய அவயம் : இருதயம்.
உரிய உலோகம் : பொன்.
உரிய மொழி : தெலுங்கு, கன்னடம், மலையாளம்.
உரிய ரத்தினம் : புஷ்பராகம்.
உரிய ஆடை : பொன்னிற ஆடை.
உரிய மலர் : முல்லை.
உரிய தூபம் : ஆம்பல்.
உரிய வாகனம் : யானை.
உரிய சமித்து : அரசு.
உரிய சுவை : தித்திப்பு.
உரிய தான்யம் : கொத்துக்கடலை.
உரிய பஞ்ச பூதம் : தேயு.
உரிய நாடி : வாத நாடி.
உரிய திக்கு : வடகிழக்கு( ஈசான்யம் ).
உரிய அதி தேவதை : பிரம்மா, தட்சிணாமூர்த்தி.
உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.
உரிய குணம் : சாந்தம்.
உரிய ஆசன வடிவம் : செவ்வகம்.
உரிய தேசம் : சிந்து.
நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
பகைப் பெற்ற கோள்கள் : புதன், சுக்கிரன்.
சமனான நிலை கொண்ட கோள்கள் : சனி, ராகு, கேது.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒருவருடம்.
உரிய தெசா புத்திக் காலம் : பதினாறு ஆண்டுகள்.
வியாழனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 3,6,8,12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு : சிம்மம், கன்னி, ரிஷபம், மிதுனம், துலாம், கும்பம்.
பகை வீடு : மேஷம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் : தனுசு, மீனம்.
நீசம் பெற்ற இடம் : மகரம்.
உச்சம் பெற்ற இடம் : கடகம்.
மூலதிரி கோணம் : தனுசு.
உரிய உப கிரகம் : எமகண்டன்.
உரிய காரகத்துவம் : புத்திர காரகன்.
புத்திரர், பிரம்மா, ஞானம், யோகாப்பியாசம், அச்சாரியத்துவம், அட்டமா
சித்திகள், அரச சேவை, இராச சன்மானம், சொர்ணம், தேன், கடலை, புத்தியுக்தி,
இவைகளுக்கு எல்லாம் வியாழன் தான் காரகன்.
தியான சுலோகம் (தமிழ்)..
"குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ருகஸ்பதி வியாழப் பாகுரு நேசா
க்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி"
தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..
"தேவாநாஞ்ச ரிஷீணாஞ்ச
குரும் காஞ்சன ஸநிபம்|
பக்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்||"
வியாழன் காயத்ரி..
"ஓம் வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்||"
அடுத்த பதிவில் இந்த குருபெயர்ச்சியினால் 12 ராசிகளுக்குமான பலன்களைப் பற்றி சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.